E-TECH கல்விப் பயணத்தின் 3 ஆண்டுகள் – வரலாற்றுச் சாதனையும் அர்ப்பணிப்பிற்கான பாராட்டும்
2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட E-TECH பிரிவின் முதல் மாணவர் தொகுதி, 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இச்சாதனையின் பின்னணியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட E-TECH Project Development Committee உறுப்பினர்களின் பங்களிப்பு பெரிதும் பாராட்டத்தக்கதாகும்.
வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி
வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியின் 18 வயதுக்குட்பட்ட பிரிவில் சம்பியன் பட்டம் வென்ற தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி அணி, வெற்றிக் கிண்ணத்தை கல்லூரி முதல்வரிடம் கையளித்து கௌரவிக்கப்பட்டது. இந்த வெற்றி மாணவர்களின் அர்ப்பணிப்பையும் குழு ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது.
Untold Stories – அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி
HESAD ஏற்பாட்டில் தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் 2026 மே 26 அன்று நடைபெற்ற "Untold Stories" அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனுள்ள அனுபவங்களையும் ஊக்கமளிக்கும் வழிகாட்டல்களையும் பெற்றனர்.
Prefects Investiture Ceremony 2026/2027
Alhamdulillah! The Prefects' Investiture Ceremony 2026/27 was marked by generous donations and the inauguration of the DMCC Prefects' Union Alumni Chapter. We sincerely thank all our donors for their valuable support towards the development of our students and prefects.
ஜப்பானின் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பான விசேட செயலமர்வு
ஜப்பானின் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பான விசேட செயலமர்வு திகதி: 14.06.2026, ஞாயிற்றுக்கிழமை நேரம்: பி.ப. 2.30 – 4.00_ இடம்: Japan Language & Training Center, கண்டி மேற்குறித்த செயலமர்வில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள், உங்கள் பெயர், பாடசாலை சுட்டிலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை 13/06/2026 சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு முன் 0706565713 என்ற இலக்கத்திற்கு SMS அல்லது WhatsApp மூலம் அனுப்பி வைக்கவும்.